Tamil-தமிழ்
We aim to give an insight into Tamil culture and society in a Tamil a context. We as a school aim to provide extra curriculum for student by giving them opportunity to take up a sport , music alongside the language. We aim to teach student to be more Eco-friendly by providing lessons on how to help the environment and minimise the amount of waste. The School aim to give some donation to the people who have been affected by war and natural disasters.
வேரும் விழுதும் உதவித் திட்டம் / அறம் செய்ய விரும்பு
துமி மின்னிதழ் 50 இதழ்களை கடந்து பயணிப்பதை முன்னிட்டு தமிழ்க் கல்விக்கூடம் குறோளி அனுசரணையில் இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் இடையே நடாத்தப்பட்ட "ஆய்வு அரசர்கள்" என்கிற ஆய்வுப் போட்டியில் எமக்கு கிடைக்கப்பெற்ற ஆய்வுகளில் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டு பரிசில் பெறுகின்ற முதல் மூன்று வெற்றியாளர்கள்...
1. செல்வி. தெ. வஜிதா (முதலாம் இடம்)
2. செல்வி. ப. டியனி (இரண்டாம் இடம்)
3. செல்வி. ஜெ. சிவச்சித்ரா (மூன்றாம் இடம்)
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களையும் சான்றிதழ்களையும் கலாநிதி. செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் மற்றும் அதிபர் எஸ். சாந்தகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.
எமது மண் சார்ந்ததும் மக்கள் சார்ந்ததுமான இவர்களது ஆய்வுகள் துமி மின்னிதழில் தொடராக வெளிவருகிறது.
அம்பாறை தளிர்கள் கல்வி நிலையத்துக்கான
எமது உதவிகள்
குறோளி தமிழ்க் கல்விக் கூடத்தின் நிதி உதவியுடன் green Layer அமைப்பினரால் இன்று பருத்தித்துறை மெதடிஸ்த் பாடசாலையில் பழமரங்கள் நிழல் தரும் என 50 மரங்கள் நாட்டப்பட்டது (14/07/22)
அன்புடையீர் ! வணக்கம் !
எமது விளையாட்டு நிகழ்வு உணவக விற்ப்பனையில் £500.00 யை தாயக மாணவர்களின் கல்வி உதவிக்கு வழங்கவுள்ளோம் இதில் இந்த தொகையை அதிகரிக்க இணைய விரும்புவோர் இணையலாம். நன்றி !
நல்லோர் இணைவால், நம் இளையவர்களுக்கு இருசக்கரவண்டிகள் துமியால் வழங்கப்பட்டன!
கனடாவில் வதியும், செல்வன்.அரிசன் மற்றும் செல்வி.அல்வினா ஆகியோரின் நிதியில் இரு மாணவர்களுக்கும்,
சிங்கை தேசத்து உறவுகள், திரு. அருள் ஒஸ்வின், திரு. சுந்தர் ஆகியோரின் நிதியில் இரு மாணவர்களுக்கும், லண்டன் குறோளி தமிழ் கல்விக்கூடத்தின் நிர்வாகி, திரு. சீலன் அவர்களின் நிதியில் ஒரு மாணவருக்கும்,
லண்டன், திருமதி.குமுதினி வாகீசன், பிரான்ஸ் தேசத்தில் வதியும் திரு.வி.கோகுலராம் அவர்களின் நிதியில் ஒரு மாணவருக்குமாக, ஆறு துவிச்சக்கர வண்டிகள், கிளிநொச்சி, ஜெயபுரம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு, பாடசாலை, அதிபரின் வழிகாட்டலினூடாக இன்று வழங்கிவைக்கப்பட்டன!
பாடசாலைக்கு மிக நீண்ட தூரத்தில் இருந்து நடந்து வந்து கல்வியைத்தொடரும் பிள்ளைகள் இனி விரைந்து சிரமமின்றி கல்வியைத்தொடர்வார்கள்!
‘தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.’
அன்புக்குரியோருக்கு
எமது பொங்கல் தயாகம் ன் நோக்கிய உதவித் திட்டத்துக்கு உதவ முன்வருவோர் இங்கு உள்ள எமது வங்கியில் வைப்பிடலாம்
வைப்பிடும்போது உங்கள் பெயர் Reference அக குறிப்பிடுங்கள்
அத்துடன் நீங்கள் வைப்பிட்ட விபரத்தை எமக்கு மின் அஞ்சல் அல்லது குறிஞ் செய்தியாகவே எமக்கு தெரியப்படுத்துங்கள்
Tamil learning centre Crawley
Ac no- 22290502
sort code 40 - 18- 22
HSBC
tkkcr@hotmail.co.uk
07367395859
அன்புடையீர்!
எமது கல்விக்கூடத்தில் நல்வாய்ப்பு சீட்டு வெற்றியாளர்களுக்கு பரிசில்கள்
வழங்கியதுடன் விளையாட்டு நிகழ்வில் ஊக்கப் பதக்கம் கிடைக்காதவர்களுக்கு பதக்கம் வழங்கினோம்.
மேலும் எமது தாயகம் நோக்கிய உதவியாக விளையாட்டு நிகழ்வு T shirt
ஊடாக தென் தமிழீழத்தில் £1200. போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம் .
தொடர்ந்து நல்வாய்ப்பு சீட்டு மூலம் £1000
தென்தமிழீழம் மாவட்டங்களில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ உள்ளோம்
எமது கல்விக்கூடம் தாயகம் தமிழகம் உட்பட
இதுவரை £ 5385.00 உதவியாக வழங்கியுள்ளது
இப்பேருதவிக்கு உதவிய அனைவருக்கும்
எமதுஅன்பும் நன்றியும்.
Our biggest thanks are to the Crawley Council and the Crawley Police
கடந்த தைப்பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் தாயகத்தில் உதவி வேண்டி நிற்கும் மாணவர்களுக்கு உதவும் திட் டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட் டத்தில் உதவி வேண்டிய நிலையில் இருந்த 183 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்ட்து
தமிழ்நாடு சென்னையில் பெருவெள்ளத்தால் பதிக்கப்பட்ட பெண்
பிள்ளைகளுக்கு 35000.00(£340 )பொறுமதியான உணவுப்பொருட்களும் உடைகளும் வழங்கப்பட்டது இப்பணிக்கு உதவிய அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலுக்கு தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கிழ் இவ் ஆண்டும் 175,000.00 (£850) பொறுமதியான கற்றல் உபகரணங்கள் கைதடி நுணாவில் அ.த.க.பாடசாலை மாற்றும் தென்மராட்சி பிரதேசசெயலக பிரிவுட்குட்பட்ட கோயிலாமனை கிராமத்தின்முன்பள்ளிமாணவர்களுக்கும் வழங்கப்பட்டது இப்பணிக்கு உதவிய அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்
Our Aviruchudar Child Development Centre is dedicated to improving the education of children in our homeland, particularly in the extremely poor areas of Maddu, Ampara, and Thirumali, where many children are unable to attend school regularly. We currently operate 14 centres and will be opening a new centre in Badulla, in the hill country, next month. Our educational centre (TLCC) supports three of these centres through the financial contributions of our administrators எமது தாயகத்தில் மட்டு /அம்பாறை /திருமலை இடங்களில் மிகவும் வறுமையில் பள்ளிகளுக்கு தொடர்சியாக செல்லமுடியாத குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டுப் பணியை எமது அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்விநிலையம் பணி செய்கின்றது 14 நிலையங்கள் உள்ளது வரும் மாதம் மலையகம் பதுளையில் ஒரு நிலையம் தொடங்க உள்ளோம் எமது கல்விக்கூடம் (TLCC ) 3 நிலையங்களை பராமரிக்கின்றது எமது நிர்வாகிகளின் நிதி உதவியால் அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்விநிலையம்
https://drive.google.com/file/d/1gcu60Z7_tJNGV7OrpWn05qF4c1su1xHQ/view?usp=sharing ☝அ.த.க.மே.பேரவையின் 2022-2023 அரையாண்டுத் தேர்வுத்தாள்கள் https://drive.google.com/drive/folders/1EBVs0aDmwjmoSiYGhp2wpa0DByi9Pz62?usp=sharing அரையாண்டு புலன்மொழித்தேர்வு - 2022-2023☝ https://drive.google.com/drive/folders/1y60pAjdhZQSjrWSJzbUZDORRRgMQQpsV?usp=sharing அரையாண்டு எழுத்துத்தேர்வு 2022☝ விடைத்தாள்கள்" அன்புக்குரிய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வணக்கம்! எமது இணைய வழி பயிற்சிக்கு கால எல்லை இல்லை நீங்கள் எப்போதும் பயன்படுத்தலாம் உங்களுக்கு கிடைக்கும் சான்றிதழ்களை எமது மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கும் நிலையில் நாம் உங்களுக்கான சான்றிதழை கல்விக்கூடத்தில் வழங்குவோம். நன்றி! ...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி
Delete